2021 ஜூன் 19, சனிக்கிழமை

பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரியின் நிர்வாகத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒரு பகுதியினர் இன்று காலை முதல் கல்லூரியின் பிரதான காரியாலயத்திற்கு முன்னால் கவனீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரியின் நிருவாக சீர்கேடுகளையும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் வீழ்ச்சியையும் ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கல்லூரியின் மாணவர்கள் பலரும் இன்று காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை வகுப்பறைக்குச் செல்லாதிருந்து அதன்பின்பே வகுப்பறைக்குச் சென்றுள்ளனர். எனினும் மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் மைதானத்தில் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் காரியாலயத்துக்கு முன்னால் திரண்டு உள்ளதால் மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ள பொகவந்தலாவைப் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரெங்கராஜுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை இந்தக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .