2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

லொறியில் மோதி ஒரு வயது குழந்தை பலி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தனது வீட்டு வாகன தரிப்பிடத்திலிருந்து லொறி ஒன்றை பின்பக்கமாகச் செழுத்தும் போது வீட்டு முற்றத்திற்கு வந்த ஒரு வயது குழந்தையொன்று, அதில் சிக்குண்டு ஸ்தலத்திலே மரணமான சம்பவம் கண்டி, கடுகண்ணாவயில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவத்தில் லொறியைச் செழுத்தியவர் அக்குழந்தையின் பாட்டனாவார். வீட்டினுள் இருந்த குழந்தை தனது மூத்த சகோதரர்கள் பாடசாலை செல்வதைப்பார்க்க வெளியே வந்த நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில், பிலிமத்தலாவை, கிராகம என்ற இடத்தைச் சேர்ந்த பாரமி செஹெனா விஜேரத்ன என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. கடுகண்ணாவ பொலிஸார் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .