2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நக்கிள்ஸ் வனப் பகுதியில் தீ விபத்து

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ். குவால்தீன்)

பம்பரகல, நக்கிள்ஸ் வன பகுதிகளில் நேற்றிரவு திடீரென தீ ஏற்பட்டுள்ளது. த்தீயினால் பம்பரகல வன பகுதியில் மூன்று ஏக்கர் பரப்பளவிலுள்ள பெறுமதி மிக்க மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று எலமல்பொத்த பகுதியில் அமைந்துள்ள நகள்ஸ் இயற்கை வன பகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் பத்து ஏக்கருக்கும் அதிகமான வன பகுதி சேதமடைந்துள்ளது. பிரதேசவாசிகள். வனப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட்டாக தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத்திடீர் தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மிருக வேட்டையில் ஈடுபடுகின்ற சில விஷமிகளே இத்தகைய செயலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .