2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களிடையே மோதல்: ஒருவர் கைது.

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்).

கம்பளை நகரில் நேற்று புதன்கிழமை பிரபல தமிழ்மொழிமூல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவன், தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட மாணவன் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 7.15 மணியளவில் இவ்விரு மாணவர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ் வாக்குவாதம் முற்றிய நிலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவனை கொங்கிரீட் கல்லால் தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .