2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கம்பளையில் மாலை நேர பஸ் சேவை இடம்பெறாமையால் மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை நகரில் இருந்து பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் கிராமப் புறங்களுக்கும் மாலை ஏழு மணிக்குப் பின்பு பஸ் சேவை இடம்பெறாமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கம்பளை நகரில் இருந்து நயாப்பன, புபுரஸ்ஸ, பெரட்டாசி மற்றும் அட்டபாகை முதலான தோட்டப் பகுதிகளுக்கான பஸ் சேவை மாலையில் இடம்பெறுவதில்லை என்று தோட்டப்புற மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மாலை ஆறு மணியுடன் தனியார் பஸ் வண்டிகளும் சேவையை நிறுத்திக் கொள்வதாகவும் அம்மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .