2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சப்ரகமுவ பல்கலை மாணவர் சங்கங்களுக்கு தடை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சப்ரகமுவ பல்கலைகழகத்தின் பிரதான மாணவர் சங்கம் உட்பட அனைத்து பீடங்களிலுமுள்ள மாணவர் சங்கங்களை தடைசெய்துள்ளதாக அப்பல்கலைக்கழக உபவேந்தர் மஹிந்த ரூபசிங்க தெரிவித்தார்.

மாணவர்கள் சட்ட திட்டங்களை மீறல், பல்கலைக்கழகத்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவித்தல், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு தடையேற்படுத்தல் ஆகிய காரணங்களை முன்னிட்டே இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மாணவர்கள் கூட்டங்கள் கூடுவது. சுவரொட்டிகள் தயாரித்து ஒட்டுவது ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் உபவேந்தர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .