Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மஸ்கெலியா லங்கா தோட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் நேற்று மாலை சென்று சந்தித்துள்ளார்.
இவர்களுக்கு மாற்று குடியிருப்புக்களை ஏற்படுத்தி தருமாறு தோட்ட முகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.
லங்கா தோட்டத்தின் இரண்டாம் இலக்க குடியிருப்பில் நேற்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 குடும்பங்களைச்சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
47 minute ago
58 minute ago