2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பன்வில பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Super User   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சீ.எம்.ரிஃபாத்)

கண்டி, பன்வில பிரதேச சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை பதவிகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநித்துவப்படுத்துகின்ற வி.எஸ். அரியநாயகம் பன்வில பிரதேச சபையின் புதிய தலைவராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் பன்வில பிரதேச சபையின் முதலாவது தமிழ் தலைவராக வி.எஸ். அரியநாயகம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சபையின் முன்னாள் தலைவரான சரத் கீர்த்திரத்ன இம்முறை உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .