2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கம்பளை புகையிர நிலையத்தில் தமிழ் அதிகாரிகள் இன்மையால் மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
    
கம்பளை புகையிர நிலையத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்மையால் தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இப்புகையிரத நிலையத்திற்கு வரும் பெருந்தோட்டப்புற மக்கள் உட்பட தமிழ் பேசுவோர் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இப்புகையிரத நிலையத்திற்கு வரும் பொதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக  தமிழ் மொழிமூலமான ஆவணங்களை கையாள முடியாத நிலை நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தின் பிரதான நகர்களான அட்டன் , பதுளை மற்றும் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பெருந்தொகையான பொதுமக்கள் இப்புகையிர நிலையத்தை நாடி வருகின்றனர். மேலும் தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையால் புகையிரத நேரசூசி தொடர்பான அறிவித்தல்களும் சிங்கள மொழியில் மட்டும் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

எனவே தமிழ்பேசும் மக்களின் தேவை கருதி இப்புகையிரத நிலையத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை  நியமிக்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .