2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

மோதலின்போது வயோதிப பெண்மணி உயிரிழப்பு : லிந்துலையில் சம்பவம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

அயல் வீட்டார் இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதலின் போது 61 வயதுடைய பெண்மணி நிலத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று லிந்துலை மவுசல்ல மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் பழனி குப்பாய் என்ற பெண்மணியே உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் லிந்துலை பொலிஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .