2021 மே 15, சனிக்கிழமை

அனுருத்த ரத்வத்தயின் இறுதிக்கிரியை இன்று; அரச நிறுவனங்களை மூட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதையிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி நகரிலுள்ள அரசாங்க நிறுவனங்கள் பகல் 12 மணியுடன் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பூரண இராணுவ மரியாதை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு குடும்ப மாயானமான நித்தவெல மாயானத்தில்  நடைபெறவுள்ளது.

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தனது வீட்டில் வழுக்கி விழுந்திருந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையிலேயே அவர் கடந்த வியாழக்கிழமை காலமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .