2021 ஜூன் 16, புதன்கிழமை

தொழிலாளர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ ஸ்டெலியன் பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான கோடன், ஓல்டிமார் ஆகிய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிவந்த நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ ஸ்டெலியன் பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான கோடன், ஓல்டிமார் ஆகிய பெருந்தோட்டங்கள் தற்போது இலாபத்தை நோக்கிச்  செல்கின்றன. இந்த நிலையில், இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்; வகையிலேயே இந்த அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த பெருந்தோட்டத்துறைசார் நிபுணர் அசோக் பாண்டே கோடன், ஓல்டிமார் தோட்டங்களின் அதிகாரிகளான சீ.எஸ்.வீரசிங்கம், ஜீ.எஸ்.தலுவத்த, தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .