2021 ஜூலை 31, சனிக்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் கடற்படை வீரர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கடற்படை வீரர் ஒருவரை  மடக்கிப்பிடித்த பிரதேச மக்கள், அவரை மரத்தில் கட்டிவைத்து பின் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தனது வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த 07 வயதான இந்தச் சிறுமிக்கு சந்தேக நபர் மலர் ஒன்றை காண்பித்து சிறுமியை ஏமாற்றி அவரது வீட்டுக்குச்  கூட்டிச் சென்று வல்லுறவை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .