2025 மே 23, வெள்ளிக்கிழமை

உதவி ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான வழிகாட்டி கைநூல் வழங்கி வைப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்


  மூவாயிரம் மலையக பெருந்தோட்ட  உதவி ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான வழிகாட்டி கைந்நூல் புதன்கிழமை(20) கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு. நோர்வூட் விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலும் நோர்வூட், கொட்டகலை, மன்றாசி பூண்டுலோய போன்ற பகுதிகளிலும் வழிகாட்டி கைநூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை  உறுப்பினர் கணபதி கனகராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான  தினேஸ் தெய்வேந்திரன், அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.                        
   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X