2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஹட்டன் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் முற்றாக சேதம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் நகரின் பிரதான வீதியில் நேற்று  புதன்கிழமை மாலை  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 வர்த்தக நிலையங்கள் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளன.

இத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் பல கோடி ரூபா பொருட்களுக்கு  நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தினால் உணவகமொன்று, பலசரக்கு கடைகள் மூன்று,   நகைக் கடைகள் உட்பட  7  கடைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.

அத்துடன் தீ ஏனைய கடைகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில் டோசர் இயந்திரம் மூலம் கடைகளின் சுவர்கள் இடிக்கப்பட்டதால் மேலும் சில கடைகளின் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டன.

பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை அணைப்பதற்கு முயன்ற போதும் முயற்சி பயணளிக்காத நிலையில்  சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்பே நுவரெலியா மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் அவ்விடத்திற்கு வந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு  வருகைத்தந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அந் நேரத்தில் உடனடியாக எடுக்க வேண்டிய சில விடயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இதேவேளை இத் தீ விபத்துத்தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உடனடியாக தீயணைப்பு  பிரிவொன்றினை ஏற்படுத்துவதற்கும் ஹட்டன் - டிக்கோயா நகரத்திலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கிடையில் தீ இடைவெளி கட்டமைப்பினை உடனடியாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.

இதேவேளை ஹட்டன் நகரில் தீ விபத்து ஏற்பட்டதன் பின்பு நகரின் பாதுகாப்பிற்காக நேற்று இரவு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர். இந் நிலையில் ஹட்டன் நகரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தினை கண்டறிவதற்காக கொழும்பிலிருந்து இரசாயனப்பகுப்பாய்வு பிரிவின் அதிகாரிகள் ஹட்டனுக்குச் சென்றுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


 


  Comments - 0

  • K.Ponnuthurai Friday, 08 April 2011 03:32 PM

    நகரத்தில் நெருப்பு பிடித்ததுடன் கட்டயாம் தீ அணைப்பு படை தேவை இவ்வளவு நாளும் எத்தனை லயம் நெருப்பு பிடித்து அப்போது எங்கே போனது எந்த யோசனை? கதிர்காமம் ஆறுமுக கடவுளே நீதான் மலையக மக்களை காக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .