Editorial / 2026 மார்ச் 08 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி - மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (08) அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அந்த நிலையத்திற்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இடத்தில் தளபாடக் காட்சி அறையுடன் சேர்த்து, தளபாட உற்பத்தி நிலையமும் மரக் களஞ்சியசாலையும் இயங்கி வந்துள்ளன. தீ விபத்தின் காரணமாக இந்த மூன்று பிரிவுகளுமே சேதமடைந்துள்ளதுடன், தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அலவத்துகொடை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
9 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
09 Mar 2026