R.Maheshwary / 2021 ஜூலை 15 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.எம். செல்வராஜா
பூப்பந்தாட்டம், (பெட்மின்டன்) தொழில் நுட்ப நிபுணத்துவ தெரிவுக் குழுவில், பதுளை மாவட்டத்தின் பசறையைச் சேர்ந்த செல்வி அகல்யா, தெரிவாகியிருப்பமை முழு மலையகத்திற்கும் மாத்திரமன்றி, குறிப்பாக பதுளை மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கே பெருமை சேர்த்துள்ளதென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்த அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில், பூப்பந்தாட்ட தொழில் நுட்ப நிபுணத்துவ தெரிவுக் குழுவில், முதல் உறுப்பினரான இவர் ஒலிம்பிக் போட்டிக்கும் தொழில் நுட்ப அலுவலராக, சர்வதேசம் செல்லும் முதல் இலங்கை தமிழ் ஆசிரியையாகவும் இருந்து வருகின்றார். இவர் தற்போது பசறை தமிழ் தேசிய கல்லூரியின் ஆசிரியையாகவும் உள்ளார்.
மலையகப் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புக்கள் கிடைக்குமாயின், அவர்கள் திறமைசாலிகள் என்ற ரீதியில், சர்வதேசமும் புகழும் வகையில், தெரிவாவது உறுதியாகும். இதற்கு செல்வி அகல்யா முன்னுதாரணமாவர். ஆகையினால், எம்மவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதலாலேயே, அவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். அந்நிலையிலும், அவர்கள் திறமைசாலிகளாகவே தெரிவாகின்றனர்.
செல்வி அகல்யா, மென்மேலும் தமது திறமைகளை உறுதிப்படுத்தி, வாழ்க்கையிலும் உயர வேண்டுமென்று வாழ்த்துக்கின்றேன். அவரை உருவாக்கிய பெற்றோருக்கும் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago