2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அக்குறணையில் அறிவுறுத்தும் திட்டம்

Gavitha   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேச செயலகப்பிரிவில், தற்போது வேகமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக, அப்பகுதியிலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களை அறிவுறுத்தும் திட்டம் ஒன்று, நேற்று (05), ஆரம்பிக்கப்பட்டது.

அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தலைமையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், கண்டி மாவட்டத்தில், அக்குறணையிலேயே, அதிகபட்ச தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இதைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, மக்களை அறிவூட்டுவது மிக முக்கியமானது என்பதால், கிராம் கிராமமாக சென்று அறிவூட்டி வருவதாகவும் இதற்கு, பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X