2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அக்குறணையில் இன்றும் எதிர்ப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 01 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் வலியுறுத்தியும் அக்குறணை நகரில், இன்று (1) மாலை அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

அக்குறணை பிரதேச சமூக மற்றும் இளைஞர் விளையாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

கடும் மழையையும் பொறுட்படுத்தாது பாரிய அளவில் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்குறணை நகரில் ஏற்கெனவே அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X