Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 22 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, சபையின் உறுப்பினர்களுக்கு, 32 இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென, சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அறிவித்தார்.
அக்குறணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம், அலவத்துகொடையில் அமைந்துள்ள பிரதேச சபைக் கட்டடத்தில், நேற்று (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையின் உறுப்பினர்கள், தமது பிரதேசங்களுக்கு ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதுடன், மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.
எனவே, தமது சபைக்கு ஏற்றவாறு, ஒரு தொகை பணத்தை ஒதுக்கியுள்ளதுடன், தலைவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாயும் உப தலைவர் மற்றும் எதிர் கட்சித் தலைவர் ஆகியோருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வீதமும், ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச சபையில், 30 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், அதன் தவிசாளருக்கும் உதவித் தவிசாளருக்கும் எதிர் கட்சித் தலைவருக்கும் ஐந்தரை இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், ஏனைய 27 உறுப்பினர்களுக்கும், தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 27 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago