Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச சபையில் இன்று( 26) இடம் பெற்ற அதன் முதலாவது அமர்விற்கு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து வந்து, அமைதிப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம். இஸ்திஹார் தலைமையில் இன்று (26), அலவத்துகொடையிலுள்ள அக்குறணை பிரதேச சபையில் இக் கூட்டம் இடம்பெற்றது.
இவ் அமர்விற்கு வருகை தந்த, ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்களும், தமது கைகளில் கருப்புப் பட்டி அணிந்து கொண்டு, சபைக்கு சமுகம் தந்திருந்தனர்.
இதுதொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் அஜ்மீர் பாரூக் கருத்து தெரிவிக்கையில், “தற்போது அமுலில் உள்ள, உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், நியாயமான முறையில் சபையின் அதிகாரங்கள் கிடைப்பதில்லை என்றும், அக்குறணை பிரதேச சபையில், 12 அங்கத்தவர்களைப் பெற்று, அதிகூடிய அங்கத்தவர்களை பெற்ற தமக்கு, அதன் தவிசாளர் பதவியோ, உப தவிசாளர் பதவியோ பெற்றுக்கொள்ள முடியாது போனது, அத்தேர்தல் முறையில் உள்ள குறைபாடாகும் என்றும், அதனை எதிர்த்தே, தாங்கள் இன்று கருப்புப் பட்டி அணிந்து சபைக்கு சமுகம் தந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இங்கு கருத்து தெரிவித்த தலைவர் ஐ.எம்.இஸ்விஹார், “தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதனால், கட்சி பேதங்களை மறந்து அனைத்து உறுப்பினர்களும் மக்களுக்கு சேவை செய்ய ஒன்றுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago