2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அசுத்த அறையிலிருந்து தாயை மீட்டெடுத்த பொலிஸார்

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

ஐந்து பிள்ளைகளால் அடிப்படை வசதிகளற்ற அசுத்தமான அறையில் கடந்த 15 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய தாயை, நேற்று புதன்கிழமை (11) சியம்பலாண்டுவ பொலிஸார் மீட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

28 வருடங்களுக்கு முன்னர் தந்தை இறந்தவுடன் தாயின் பெயரிலுள்ள அனைத்து சொத்துக்களை இரு மகன்களும் 03 மகள்களும் இணைந்து பங்கிட்டுள்ளனர். 

பின்னர், ஐந்து பேரும் ஒவ்வொரு வருடமும் தாயை ஒருவர் பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் சில முரண்பாடுகள் காரணமாக கடந்த 15 வருடங்களாக அடிப்படை வசதிகளற்ற அசுத்தமான அறையில் தாயை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். 

இது குறித்து சியம்பலாண்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த தாயை மீட்ட பொலிஸார், சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .