2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அதிகரித்த குளவி கூடு ;மக்கள் அச்சம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொலிபாத மலைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அருகே நிருவபட்டுள்ள புத்தர் சிலை பகுதியில் ஜந்துக்கு மேற்பட்ட குளவி கூடு உள்ளது.

இப் பகுதியில் கடும் வெப்பமான உள்ளதாலும் கடும் காற்று வீசுவதால் இந்த குளவி கூடு களைந்து அவ் வீதியூடாக செல்லும் மக்களை தாக்க கூடும்.

நாளாந்தம் சிவனொலிபாத மலைக்கு உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் அவ் வீதியூடாக பயனிப்பதாளும் நல்லதண்ணி தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அவ்வீதியில் அதிக அளவில் போக்குவரத்து மேற் கொள்வதால் அந்த குளவி கூட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இந்த குளவி கூடுகளை அப்புற படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப் பகுதியில் உள்ள அனைத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செ.தி பெருமாள் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X