2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அதிகாரப் பகிர்வு அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1987 ஆம் ஆண்டு அதிகார பகிர்வு முறைமை ஒன்றாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதுவரை நடைமுறையில் இருந்த 'கம்சபா' முறைமை பிரதேச சபை முறையாக மாற்றப்பட்டபோது, கம்சபா முறைமையில் உள்வாங்கப்பட்டிருக்காத மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற பிரதேச சபைச் சட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

 

எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தகைய அதிகாரப்பகிர்வு முறைமையாயினும் அது நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அமைதல் வேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல்அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். 


சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (7) நடைபெற்ற  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகள் தொடர்பான உத்தேச அரசியல்  அதிகாரப் பகிர்வு - மொழி ஆகிய விடயதானங்கள்  எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில்  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,, 

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் புதிய அரசியலமைப்பு  உருவாக்கும் நோக்கிலான  அரசியலமைப்பு பேரவைய உறுப்பினராகவும், 'மத்தி - சுற்றயல் அதிகார பகிர்வு' குறித்த உப குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டவன் என்ற வகையில் இலங்கையில் அமையப் பெறவுள்ள உத்தேச அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு எவ்வாறு அமைதல் வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து அதன் தயாரிப்புப் பணிகளிலும் அதனை அளிக்கை செய்வதிலும் பங்களிப்பு செய்யக் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

துணைத்தத்துவ கோட்பாட்டின் (Principle of Subsidiarity ) அடிப்படையில் அதிகபட்சம் சாத்தியமான எல்லா வழிவகைகளினாலும் அதிகாரப் பகிர்வானது அமைதல் வேண்டும்.

அதாவது, அதிகார அலகுகளின் எல்லாப்படிநிலையிலும் (Tiers) வினைத்திறனாகக் கையாளக்கூடிய விடயதானங்கள் அத்தகைய படிநிலைக்கு வழங்கப்படல் வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற படிநிலையானது அரசாங்கத்தின் அடுக்கு ஒன்றாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன்,  மாகாண சபை அதிகாரங்களை முதன்மை அதிகார பகிர்வு அலகாக அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பது தமது முன்மொழிவாகும். 

மேலதிகமாக அரசாங்கத்தின் பல்வேறு அடுக்கு நிலைகளிலும், வேறுபட்ட புவியியல்சார் பகுதிகளிலும், அத்தகைய பகுதிகளுக்குள் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில்  சமுதாயப் பேரவைகள் ( community Councils ) உருவாக்கப்படுவதை அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதுவரை நடைமுறையில் இருந்த 'கம்சபா' முறைமை பிரதேச சபை முறையாக மாற்றப்பட்டபோது, கம்சபா முறைமையில் உள்வாங்கப்பட்டிருக்காத மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற பிரதேச சபைச் சட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

எனவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தகைய அதிகாரப்பகிர்வு முறைமையாயினும் அது நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அமைதல் வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். 

எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தகைய அதிகாரப்பகிர்வு முறைமையாயினும் அது நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அமைதல் வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X