Ilango Bharathy / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சரிடம்
முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு, பதுளை இணக்கச்சபையில்
நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருதரப்பினருக்கிடையில் பூரண
இணக்கப்பாடு ஏற்பட்டது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க, 2018ஆம் ஆண்டில் பதுளை தமிழ் மகளிர்
மகாவித்தியாலய அதிபர் பவானி ரகுநாதனை முழந்தாளிடுமாறு கோரியதான சம்பவம்
இடம்பெற்றது.
முன்னாள் முதலமைச்சரின் ஆதரவாளரின் மகளை, பாடசாலையில் அனுமதிக்க, அதிபர்
மறுத்தமையினாலேயே, மேற்படி அதிபர் முழந்தாளிட்ட சம்பவம் இடம்பெற்றதாக
குறிப்பிடப்பட்டது.
இம்முறைப்பாடு தொடர்பில், பதுளை பொலிஸார், பதுளை நீதவான் நீதிமன்றத்தில்
வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். நீதவானின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த
முறைப்பாடு, பதுளை இணக்கச்சபைக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, இது தொடர்பான விசாரணை நேற்று (13) இணக்கச்சபையில்
இடம்பெற்றதுடன், இதன்போது இருதரப்பினராலும் இப்பிரச்சினையை நிறைவிற்கு
கொண்டுவர பூரண இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் முதலமைச்சரும்
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க, 'அரசியல்கட்சியின் தொழிற்சங்கமொன்றின் சிலர் இணைந்து, தனதுஅரசியல் செயற்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வித்தியாலய அதிபரை பயன்படுத்தி, தனக்கெதிரான போராட்டங்கள், பிரசாரங்கள் பல இடம்பெற்றிருந்தபோதிலும், தா ன் அவற்றை அலட்டிக்கொள்ளவில்லை.
அதேப்போல் அதிபர் தற்போது தனியாக்கப்பட்டார். இதனை அதிபரும்
ஒப்புக்கொண்டுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட
வழக்கையும்அதிபர் வாபஸ் செய்வதாக உறுதியளித்துள்ளார். சந்தர்ப்பவாதக்
கூட்டமொன்று தம்மை தவறாக வழிநடாத்தியுள்ளனர். தன்னையும் கஸ்டத்தில்
போட்டுவிட்டனரென்றும், அதிபர் தன்னிடம் கூறினார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .