Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தை ஊடறுத்துச் செல்லும் ஆற்றில் இரத்தினக்கல் அகழ்வை சட்டரீதியாக முன்னெடுக்க, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபணரக் கைத்தொழில் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யக்கோரி, வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்ட மக்களால் நேற்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிற்சாலையின் முன்பாக ஒன்று கூடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை
முன்னெடுத்தனர்.
குறித்த ஆற்றுக்கு அண்மித்துள்ள பிரதான வீதியில், சிறியளவான மண்சரிவுகள்
ஏறபட்டவண்ணமே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், அங்கு இரத்தினக்கல்; அகழ்வு மேற்கொள்ளும் போது, அங்கு பாரிய மண்சரிவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகஅவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், இதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மகாவலி அதிகாரசபை, மவுண்ட்ஜின் தோட்ட அதிகாரி, மின்சார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக குறித்த அகழ்வுக்காக சட்டரீதியாக அனுமதி பெற்றுள்ள, வட்டவளை சமுர்த்தி சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026