Editorial / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக, லொறி ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை, ஓட்டோ ஒன்றில் ஒட்டிக்கொண்டு அக்குறணை நகரத்துக்கு சென்ற நபரை, அலவத்துகொடை பொலிஸார், நேற்று இரவு(7) கைதுசெய்துள்ளனர்.
வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்போது அக்குறணை பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அக்குறணைப் பிரதேசத்துக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில மேற்படி நபர், அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை, முறைகேடாக பயன்படுத்தி, ஓட்டோ ஒன்றில் ஒட்டிக்கொண்டு அக்குறணை நகருக்கு வந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரை கைதுசெய்துள்ள பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், ஊரடங்குச்சட்டத்தை மீரிய மேலும் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago