2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அனுமதியை பரிசீலிக்க வேண்டும்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி  இறக்குமதியை தனியார்
நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியை மீள் பரிசீலணை செய்ய
வேண்டும் என, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்
பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இன்று அரிசி விலையையும் கோதுமை மாவின் விலையையும் பால்மாவின்
விலையையும்  நிர்ணயிப்பது அரிசி கோதுமை மா, பால் மா விற்பனையாளர்களே.
அதே போல இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினியின் விலையை
நிர்ணையிப்பதும் இரசாயன உரத்தையும் கிருமிநாசினியின் விலையை 
நிர்ணயம் செய்வதும் இவற்றைஇறக்குதி செய்யும் வர்த்தகர்களே என தெரிவித்த
அவர், இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளே என்றார்.

கடந்த காலங்களில்  வெளிநாடுகளிலிருந்து இரசாயன உரம் மற்றும்
கிருமிநாசினி களை அரசாங்கம் நேரடியாக இறக்குமதி செய்து மானியம்
விலையில் 13,00 ரூபாவிற்கு 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையை
விவசாயிகளுக்கு  வழங்கியது.

ஆனால் தற்பொழுது  அரசாங்கம் தனியாருக்கு இரசாயன உரம் மற்றும்
கிருமிநாசினி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதால் அவர்களே
இவற்றின்விலைகளை தீர்மானிப்பார்கள். இதனால் விவசாயிகள் அதிக விலை
கொடுத்து விவசாய உரம், மருந்துகளை வாங்க வேண்டிவரும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X