Janu / 2024 ஏப்ரல் 08 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான , வாலமலே பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி ஆலய வருடாந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் ஒவ்வாமை ஏற்ப்பட்ட காரணத்தால் சுமார் 120 பேர் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) பதிவாகியுள்ளது .
தோட்ட தொழிலாளர்களான ஆண் , பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதான உணவை உண்ட பின்னர் பிற்பகல் 06.00 மணியளவில் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளதையடுத்து அவர்களை உடனடியாக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது .
அவர்களின் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதுடன் இன்னும் 40 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025