Kogilavani / 2016 மே 13 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தை முதலிடத்துக்குக் கொண்டுவர இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13,638 அங்கத்தவர்களைக் கொண்டு நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் 509 பதிசெய்யப்பட்ட கழகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த வகையில் 2016ஆம் ஆண்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தோட்ட மற்றும் கிராமபுற இளைஞர் யுவதிகளும் அங்கத்தவர்களாக தமது கழகங்களினூடாக பதிசெய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(13) காலை நுவரெலியா கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளன உதவி பணிப்பாளர் ஜெயவீர தென்னக்கோன், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுபாஸ் குமாரசிங்க நுவரெலிய பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் ஜெ.நிதர்சன் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தினூடாக இதுவரை காலமும் செய்யப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்து.
23 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
3 hours ago