2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அமெரிக்கா பெண்ணின் சடலம் வீட்டில் இருந்து மீட்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் இறந்து கிடந்தார்.

அவர் சுற்றுலா விசாவின் மூலம்  இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார். செவ்வாய்க்கிழமை(04) அன்று அவர் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளர்

என்றும் மேலும் குறித்த பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.

வியாழக்கிழமை (06)அன்று பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

கண்டி சுற்றுலா பொலிஸ் துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X