Kogilavani / 2017 ஜூலை 10 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் வழியில், தொடர்ந்து நாம் மலையக மக்களுக்காக குரல் கொடுப்போம்” என்று, மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்
தலவாக்கலை, பாமஸ்ட்டன் கொலனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அங்ககத்தவர்கள், மலையக மக்கள் முன்னணியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வு, மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விவ்வநாதன் தலைமையில், பாமஸ்டனில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“மலையக மக்கள் முன்னணியானது, மலையக மக்களின் உரிமைக்காக அரசியல் புரட்சியாளர் சந்திரசேகரனால் உருவாக்கப்பட்டது. எனவே, அவரது கொள்கையிள் கீழ், தொடர்ந்து மக்கள் பணி முன்னெடுக்கப்படும். அத்தோடு, அமரர் சந்திரசேகரனின் புதல்வி அனுசா சந்திரசேகரனின் அரசியல் பிரவேசம், மலையக மக்கள் முன்னணிக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.
“எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் ஒன்றுபடுவது அவசியமாகின்றது. அரசாங்கத்துடன் பேரம்பேசும் சக்தியை நாம் உருவாக்கிக்கொண்டு, தொடர்ந்து மக்கள் பணியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .