Kogilavani / 2017 ஜூலை 10 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு முன்பாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்கை ஹட்டனுக்கு அழைத்துவாருங்கள்” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், அவசியமில்லாத வர்த்தகக் கட்டடத் தொகுதியை அமைத்து அதுதான் ஹட்டன் நகர அபிவிருத்தி என்ற பிழையான முன்மாதிரியை காட்டக் கூடாது” என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
'ஹட்டன் நகரத்தில், பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையான இந்த நகரத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அவ்வாறு நவீனமயப்படுத்துவதற்கான பிரேரணைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இருக்கிறது. இதுதொடர்பாக நாம் பல கலந்துரையாடல்களை கடந்த காலத்தில் நடத்தியிருக்கிறோம். வீதி அபிவிருத்தி, சுற்றுலா மையங்களை அமைத்தல், தொழில் பேட்டைகளை நிர்மாணித்தல். நவீனமயப்படுத்தப்பட்ட பஸ் நிலையத்தை அமைத்தல், வாகன தரிப்பிடம் ஒன்றை உருவாக்குதல் போன்ற பல்வேறுத் திட்டங்கள், ஹட்டன் அபிவிருத்தியில் உள்ளடங்கியிருக்கின்றன.
ஆனால், தற்போது நகர அபிவிருத்தி என்றப் போர்வையில் ஒரு சிலரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, ஹட்டன் ரயில் நிலையத்தின் முன்னாலுள்ள இடத்தில் வர்த்தகக் கட்டடத் தொகுதியை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஹட்டன் நகரத்தில் தற்போது இருக்கின்ற வர்த்த நிலையங்களுக்கு, போதுமான வியாபாரம் இல்லாத நிலையில், எதற்காக புதிய வர்த்தக நிலையங்கள் என நகர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன், இந்தக் கடைகள் கேள்விபத்திர முறையில் விற்பனை செய்யப்படவிருப்பதால், வெளிபிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கடைகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளே, அதிகமாகக் காணப்படுகின்றன.
இதனால், ஹட்டன் நகர வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மிகவும் இடநெறுக்கடிமிக்க ஹட்டன் நகரத்தை மேலும் நெறிசலுக்குட்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருக்கும் அந்த கட்டடத் தொகுதியை பிரதேச மக்கள் விரும்பவில்லை. எனவே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நகர அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை, ஹட்டன் நகருக்கு அழைத்து வந்து, மக்கள் கருத்தை அறிந்து, அதற்கேற்றால் போல் செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .