2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘அமைச்சர் திகா சேவை செய்யும் அமைச்சர்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ்

‘மக்களின் தேவையறிந்து சேவை செய்கின்ற அமைச்சராக தன்னை நிரூபித்து வருகின்றார் அமைச்சர் திகாம்பரம்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை - மன்ராசி வைத்தியசாலைக்குச் செல்லும் வீதியைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், எம்.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களான வேலு சிவானந்தன், ஏ.ராஜமாணிக்கம், ஜி.நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து கூறியதாவது,

“மலையக மக்களின் முக்கிய தேவையான வீடமைப்புத் திட்டத்தை
அமுல்படுத்துவதில், அமைச்சர் திகாம்பரம் முனைப்புடன் செயற்பட்டு வருவதால், வீடில்லாத மலையக மக்களுக்குத் தமக்கும் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

“இதே போல தோட்டப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மலையகத்தில் தோட்டப்பகுதிகளிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளுக்குச் செல்லும் பல வீதிகள் பழுதடைந்த நிலையிலுள்ளன. இந்தப் பாதைகளைச் செப்பனிட்டுத் தருமாறு அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

“அதன் பயனாக, மன்றாரி மன்ராசி வைத்தியசாலைக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்.கு தனது அமைச்சின் ஊடாக சுமார் 90 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், ரதல்ல வைத்தியசாலைக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்கு 200 மில்லியன் ரூபாய் நிதியையும் அமைச்சர் திகாம்பரம் ஒதுக்கீடு செய்துள்ளார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .