2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

அம்பகமுவ, கொட்டகலை பிரிவுகளில் 24 தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

அம்பகமுவ, கொட்டகலை ஆகிய பொதுசுகாதார பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்றைய (14) தினம் 24 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைவாக அம்பகமுவ பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேரும் கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.  

அம்பகமுவையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கினகித்தேனை, ரஞ்சுராவ, கலுகொல்ல பிட்டவல, வட்டவலை, பொல்பிட்டிகம, அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.  

கொட்டகலை சுகாதாரப் பிரிவில் இனங்காணப்பட்டவர்கள், தலவாக்கலை, வட்டகொடை, கிரேட்வெஸ்டன், ஹொலிரூட், ஸ்டொனிக்கிளிப், கிர்ஸ்லஸ்பாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X