Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சம்பள உயர்வை கேட்கவில்லை ,சம்பள முரன்பாட்டை தீர்க்க கோரியே போராடுகிறோம் என
தெரிவித்த முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்க செயலாளர் வே.தினகரன், பல்வேறு பரிமாணங்களை எடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் உறுதியான தீர்வினை
வழங்குவதில் ஒரு பொய் மௌனத்தை காத்து நிற்கிறது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நேற்று (15) காலை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்
தெரிவித்துள்ளதாவது,
.அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, பல்வேறு கால
இழுத்தடிப்புகளை செய்வதிலும், ஆசிரியர்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை
மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்ற அரசாங்கம், கல்வி சமூகத்திற்கு எதிராக மக்களை தூண்டி விட்டும் வருகிற உண்மை நிலை தெரியாது சிலர் கல்வி சமூகத்தினருக்கு எதிராக செயற்படுகின்றனர்.
இந்த விடயத்தில் அரசாங்கம் பொய்யாக ஒரு நிதிப் பிரச்சனையை உருவாக்கி பரவலாக
மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது என்பதை சுட்டிகாட்டுகின்றோம்.
அதிபர் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் தனியே சம்பள
முரண்பாடுகளுக்கெதிரானது மட்டுமல்ல.
இலவச கல்வியை உறுதிப்படுத்துதல், தரமான கல்வியை உறுதிப்படுத்தல், வரவு செலவுத்
திட்டத்தில் ஆறு வீதத்தை கல்விக்கு ஒதுக்குதல், கல்வி ராணுவ மயமாக்கல் தனியார்மயமாக்கல் என்பவற்றுக்கு எதிரானதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago