R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசுக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் சனிக்கிழமை (16) அன்று கந்தப்பளை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படட மக்கள் கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் தீப்பந்தங்களை ஏற்றியும் கோஷங்களை எழுப்பியும் இக் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொருட்களின் விலைகளை குறைக்கவும். தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும்.
தோட்ட தொழிலாளர்களின் 2000 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும். இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் எனவும். அத்தோடு மின்சார கட்டணத்தை குறைக்க கோரியும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago