Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
'கல்வி அமைச்சு என்ற வகையில் நாம் தற்பொழுது அறநெறி கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் போது அறநெறி கல்விகற்கும் மாணவர்களுக்கு விசேட புள்ளிகள் வழங்க முடியுமா? என்பதை ஆராய்ந்து வருகின்றோம்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
'எமது பாடசாலை மாணவர்களை கட்டாயமாக அறநெறி பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். அறநெறி கல்வியை முறையாக கற்றால், நாட்டில் ஏற்படுகின்ற பல விடயங்களுக்கு தீர்வு காண முடியும். அறநெறி கல்வியின் மூலமாக மாணவர்களை நன்நெறியில் வழிப்படுத்த வேண்டும். ஒரு மாணவன் சிறந்த மாணவனாக உருவாக கல்வி மட்டும் போதாது. அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக திகழ வேண்டும். அதற்கு சிறந்த இடம் அறநெறி கல்விச்சாலைகளே' என்றும் அவர் கூறினார்.
நுவரெலியா காயத்ரி ஆலய சித்தர் முருகேசு சுவாமிகளின் 82 ஆவது குரு பூஜை தினம் திங்கட்கிழமை (26) மாலை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்பு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் குரோத மனப்பான்மையுடன்; வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று அந்நிலை மாறி இரண்டு சமூகமும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சிறுவர்களிடத்தில் வளர்த்தெடுத்து அவர்களையும் இந்த பாதையில் கொண்டுச் செல்ல நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
'இன்று நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்டு அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றோம். இது வரவேற்கக்கூடிய விடயமாகும். இன்று பல நாடுகள் அபிவிருத்தி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுகின்றமையே ஆகும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள், இனம், மதம் மொழிக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். பெரும்பாலான சிங்களவர்கள் எனக்கும் வாக்களித்துள்ளனர். நீண்ட காலத்துக்கு பிறகு நடைபெற்ற ஒரு விடயமாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்நிலைமை தொடர வேண்டுமேயானால் சிறுவர்களுக்கு இதனை போதிக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago