Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார அதிகாரிகள், பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
நுவரெலியா ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தற்காலிக உணவுக் கடைகளிலும் சிற்றூண்டிசாலைகளிலும் உணவுகள் மற்றும் இனிப்பு பண்டங்களையும் உண்ணும் பொழுது அவை உரிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளனவா என பார்த்து கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிமானோர்கள் வருகை தருவதால் சந்தையில் தற்போது காலவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யக்கூடும். எனவே, பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் உணவு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் 052-2222275 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வசந்த காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 30.ஆம் திகதி வரை உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ். கே. குமார்
11 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago