R.Maheshwary / 2022 ஜனவரி 27 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
தோட்ட சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரத்தை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து விடுவதனால் மாத்திரம் திட்டங்கள் நிறைவேறிவிடுவதில்லை. அதற்கப்பால் சென்று அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே மக்களுக்கு அதன் பயன் கிடைக்கும் என்றார்.
தோட்ட சுகாதார முறைமையை அரசாங்க சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரம் குறித்து, ஊடகங்களுக்கு அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டப் பின்னரும் கூட நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை நடைமுறைப்படுத்தும்போது காட்டப்படும் பாரபட்சத்தை நாம் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே, தோட்ட சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரத்தை வரவேற்பதோடு, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை தொடர்ச்சியாக அவதானித்து வருவோம்.
பிரதேச செயலக விடயத்தில் காட்டப்படுவதுபோன்று சுகாதார விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுமிடத்து அதற்காகவும் மலையகம் முழுவதும் மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவே உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
7 minute ago
39 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
39 minute ago