Freelancer / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண சபை கல்வி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கல்வித்துறை பட்டதாரிகள் 21 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (25) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு, பேராதெனிய, கிழக்கு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களின் கல்வித்துறை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதுளை, பண்டாரவளை, வெலிமடை, பஸ்ஸர, வியலுவ, மஹியங்கனை, பிபிலை, மொனராகலை, வெல்லவாய மற்றும் தனமல்வில கல்வி வளையங்கள் காணப்படும் வசதி குறைந்த பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரத்ன, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சீ. பிரியந்தி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.எம். நந்தசேன, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம். ஜீவந்த ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

36 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
15 Jan 2026