Editorial / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் ஒருவரின் விடுதியினுள் 35அடி ஆழத்தில் பாரிய மாணிக்கக்கல் குழி தோண்டப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் விடுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் நால்வரும், திங்கட்கிழமை(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விடயம் அம்பலமானது. மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
செ.தி பெருமாள், எஸ். சதீஸ்

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago