Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று தசாப்த கல்விச் சேவையைப் பூர்த்தி செய்து ஏ.ஜே. சித்தி நஸீலா ஓய்வு பெறுகின்றார்.
1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது கல்விப் பணியை ஆரம்பித்தார்.

அன்று முதல் இன்றுவரை சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இப்பாடசாலையில் சேவையாற்றி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உன்னத சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர்களின் வாய்மை விருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை தொலைக்கல்வி மூலம்1995 - 1998 காலப்பகுதியில் நிறைவு செய்து ஆரம்ப கல்விக்கு பயிற்றப்பட்ட ஆசிரியராக தன்னை இலங்கை ஆசிரியர் சேவையில் நிலைப்படுத்திக்கொண்டார்.
உன்னத கல்விச்சேவையிலிருந்து கௌரவமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று ஓய்வுபெறுகின்ற ஆசிரியை அப்துல் ஜப்பார் சித்தி நஸீலா பணி ஓய்வு காலம் இனிதே அமைந்திட வேண்டுமென பசறை பிரதேச கல்வி சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago