Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது, ஊவா மாகாண சபையில் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக, ஊவா மாகாண பட்டதாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக கடந்தவாரம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக, ஊவா மாகாண பட்டதாரிகள் சங்கத்தினர், மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்கவிடம் நேற்று(18) கையளித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.
அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஊவா மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில், ஊவா மாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனடிப்படையில், மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை, கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்டன. இப்போட்டிப் பரீட்சையில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றன.
ஊவா மாகாண சபையினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் ஆசிரிய கொள்கைகளுக்கும் முரணானதாகவே, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, ஆசிரியர் நியமனத்தில் ஊவா மாகாண சபை எடுத்த முடிவுகள் பின்பற்றப்படல் வேண்டும்.
போட்டிப் பரீட்சை மீண்டும் நடத்தப்படல் வேண்டும். இக்கோரிக்கைகள், ஒருவார காலத்துக்குள் நிறைவேற்றப்படல் வேண்டும். தவறின் மாற்று நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்படும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'எமது கோரிக்கைகளுக்கு, உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று, ஊவா மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ரங்கன பெரேரா தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago