Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
தைத்து முடிக்கப்பட்ட ஆடைகளை, மிகவும் சூட்சுமமான முறையில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகருக்குச் சொந்தமான களஞ்சியசாலையில், யன்னலை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தே திருடிச் சென்றுள்ளனர்.
அவ்வாறு திருடப்பட்ட ஆடைகளின் மொத்த பெறுமதி 28 இலட்சம் ரூபாயாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
களஞ்சியசாலையில் கட்டடத்துக்கு அண்மையில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் இருக்கின்றன. எனினும், காட்போட் பெட்டிகளில் பொதியிட்டு அவை, இராபகலாக எடுத்துச் செல்லப்பட்டமையால், எவருமே சந்தேகம் கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், 1,300 ரூபாய் பெறுமதியான சேர்ட், பண்டாவளை நகரில் வீதியோரத்தில் போட்டு 300 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அந்த வர்த்தகர் தன்னுடைய களஞ்சியசாலையை ஒரு சந்தேகத்தில் சோதனையிட்டுள்ளார்.
அதன்போது, பெருந்தொகையான ஆடைகள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஒருதொகை ஆடைகள் கைப்பற்றப்பட்டன. R
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025