Mithuna / 2024 ஜனவரி 14 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சத்திர சிகிச்சையறைக்குச் செல்வதற்கு முன்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆடை அறையில் கைத்தொலைபேசியை பொருத்தியதற்காக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் கண்,காது, மூக்கு சத்திரசிகிச்சை அறையில், சத்திரசிகிச்சையில் பங்குகொள்ளும் பெண் வைத்தியர்கள் ஆடைகளை அணியும் அறையில் இரகசிய இடத்தில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தனது அலைபேசியின் காணொளிப்பதிவை இயக்கி மறைத்துவைத்துள்ளார். மேலும் பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து அதனை பார்த்து விட்டு அழித்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறுவைசிகிச்சையில் கலந்துகொள்வதற்காக டாக்டர் ஒருவர் தனது உடைகளை மாற்றிக் கொண்டிருந்த போது, உடைமாற்றும் அறையில் அலைபேசி இருப்பதைக் கண்டு, அதைச் சோதித்துள்ளார். அதில், தான் ஆடை மாற்றுவது வீடியோவாக பதிவாகியுள்ளது. அதைச் சோதித்த போது,மருத்துவர் தனது உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார்,அதை நீக்கிவிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
சந்தேகமடைந்தவைத்தியசாலைப் பணியாளரையும் கையடக்கத் தொலைபேசியையும் கண்டிதலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததன் பின்னர், சிலகாலமாகஅழகியபெண் வைத்தியர்கள் ஆடைகளைமாற்றும் காட்சிகளைகையடக்கத் தொலைபேசியில் வீடியோஎடுத்துஅதனைப் பார்த்து அழித்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும் பொலிஸார் அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது, அழகுக்கலைநிபுணர் ஒருவர் ஆடைகளைமாற்றியமைகையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்ததை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணையின் போது, வைத்தியர் அழகுக்கலை நிபுணராக இருந்தமையினால், வீடியோவை நீக்கவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதை பத்திரமாக வைத்து, சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியின் காணொளிப் பதிவைஎவ்வாறு இயக்கி குறிப்பிட்ட இடத்தில் வைத்துள்ளார் என்பது குறித்து விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், காணொளி நாடாக்களில் ஆடைகளை மாற்றும் வீடியோக்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் சனிக்கிழமை (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025