2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆடைக்குள் போதைப்பொருளை மறைத்துவைத்திருந்த தம்பதி கைது

Sudharshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

போதைப்பொருட்களை,  தனது மார்ப்பு கச்சைக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கூறப்படும் தம்பதியினரை மாத்தளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 2 கிராம் 965 மில்லிகிராம் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.

தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், முச்சக்கர வண்டியில் தென்ன- கிரிமெடியாவிலிருந்து மாத்தளை நகரை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மேற்படி நபரிடமிருந்து 110 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்நபரை கைதுசெய்த பொலிஸார் அவரது மனைவியையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சோதனைக்கு உட்படுத்தியபோது, அப்பெண் தனது மார்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த 2கிராம் 855 மில்லிகிராம் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

மேற்படி இருவரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .