Kogilavani / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா ஸ்ரஸ்பீ தோட்டம், அவரவத்தைப் பிரிவில், ஆற்றிலிருந்து 25 நபரொருவரின் சடலம் இன்று (30) மாலை மீட்கப்பட்டதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார்.
ஒரு குழந்தையின் தந்தையான முனியாண்டி சதிஸ் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், மாட்டுக்குப் புல் அறுப்பதற்காக இன்று (30) காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார் என்றும் இந்நிலையில் நேற்று பகல் வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிச் சென்றபோது அவரது சடலம் ஆற்றில் கிடப்பதைக் கண்டு தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026