Princiya Dixci / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பா தோட்டத்திலுள்ள பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் 5 மாதங்களும் 10 நாட்களுமான ஆண் சிசு, நேற்று திங்கட்கிழமை (12) மாலை உயிரிழந்துள்ளது.
பராமரிப்பு நிலையத்தின் பராமரிப்பாளர்களின் அசமந்தப்போக்கினாலேயே இச்சிசு உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தோட்ட வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், நான்கு வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகளை, பிள்ளைப் பராமரிப்பு நிலையத்திலேயே ஒப்படைப்பர்.
சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை காலை குறித்த சிசுவின் தாய், சிசுவை பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.
எனினும், வேலை முடித்து மாலை சிசுவை எடுத்துவருவதற்காக பராமரிப்பு நிலையத்துக்கு சென்றபோது தொட்டிலில் சிசு இறந்து கிடத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சடலம், லிந்துலை ஆதார வைத்தியசாலையில் நேற்று இரவு 7 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பாடல் தலைமை பொலிஸ் அதிகாரி வி.சுந்தரராஜ் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago