2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஆத்திரத்தால் வீதிக்கு வந்த குப்பைகள்

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தாம் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் குப்பைகளைக் கொட்டுவதால், பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொகவந்தலாவை செல்வகந்தைத் தோட்ட மக்கள், ஆத்திரமுற்று பிரதான வீதிகளில் அந்தக் குப்பைகளைக் கொட்டி, இன்று (4) தமது எதிப்பை வெளிப்படுத்தினர். 

ஸ்ரீபுர மற்றும் ஆரியபுர வீதிகளிலேயே, செல்வகந்தை தோட்ட மக்கள் குப்பைகளைக் கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனால் அவ்வீதி வழியான போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்ரீபுர, ஆரியபுர பகுதி குடியிருப்பாளர்கள், செல்வகந்தைத் தோட்டப் பகுதிக்குச் சென்று தமது குப்பைகளை வீசிவருகின்றனர்.

இதனால், செல்வகந்தத் தோட்ட மக்கள் பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். 

இது தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுச்சென்றபோதிலும் அது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகந்தத் தோட்ட மக்கள்,  குறித்த குப்பைகள் அனைத்தும் கொண்டுச்சென்று, ஸ்ரீபுர, ஆரயபுர வீதியில் வீசி எறிந்துள்ளனர். இதனால் அவ்வீதி வழியானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X